உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

ஆயித்தியமலை அன்னையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
91 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) அதிகாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பாதயாத்திரையில் மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 5.30 மணியளவில் பாதயாத்திரை ஆரம்பமானது.

புனித மரியாள் பேராலயத்திலிருந்து வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம், வலையிறவுப் பாலம் மற்றும் வவுனதீவு ஊடாக ஆயித்தியமலை நோக்கி பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விசேட சொரூபமும் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை (06) நிறைவடையவுள்ளது.

இதேவேளை, செங்கலடியிலிருந்தும் இன்று அதிகாலை ஆயித்தியமலை நோக்கி மற்றுமொரு பாதயாத்திரை இடம்பெற்றதுடன், அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி நாளை காலை இடம்பெறவுள்ள நிலையில், பெருமளவான பக்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதாள உலகக் குரோதம்; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற து***க்கிச் சூ**ல் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார்…

15 0 0
இலங்கை செய்திகள்

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக…

68 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் இனி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையக் கூடாது!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவசியம் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்குச் செல்லவுள்ள அதிகாரிகள் மட்டக் குழு, இனிவரும்…

57 0 0
இலங்கை செய்திகள்

டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கடும் கண்டனம்

ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கண்டனம் தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண…

65 0 0