உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

மன்னாரில் மாணவர்களுக்கு இலவச மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
74 பார்வைகள்

மன்னார் நகர சபையின் சிறுவர் பூங்காவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் திட்டம் நேற்று (04) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“தானத்தில் சிறந்தது கல்வி” எனும் தொனிப்பொருளில் முன்னாள் மாவட்ட வேகநடை விளையாட்டு வீரர் பிரதீபன் தலைமையில் விசேட நிகழ்வு நடைபெற்றது.

இதன் கீழ், வார விடுமுறை நாட்களில் மன்னார் நகர சபையின் சிறுவர் பூங்காவிற்கு வருகை தரும் புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பரீட்சைத் தயார்படுத்தலையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம், 2027ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி வளங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் பரீட்சைத் தயார்படுத்தலுக்கு பங்களிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் நகர சபை தலைவர் டானியல் வசந்தன் கலந்து கொண்டதுடன், இதய தொழில்நுட்பவியலாளர் நிறோன், உளநல சமூக உத்தியோகத்தர் ரொமி யூலன், குறைதீர்ப்பு ஆலோசகர் கூஞ்ஞ மற்றும் G.L.P கட்டிட நிர்மாண நிறுவன தலைவர் லிங்கேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கடந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவன் ஆத்விக் மெத்யூ, அடுத்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முதல் கட்டமாக மாதிரி வினாத்தாள்களை வழங்கி வைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதாள உலகக் குரோதம்; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற து***க்கிச் சூ**ல் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்களை பொரலஸ்கமுவை பொலிஸார்…

17 0 0
இலங்கை செய்திகள்

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக…

71 0 0
இலங்கை செய்திகள்

ஆயித்தியமலை அன்னையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) அதிகாலை நடைபெற்றது. மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு…

94 0 0
இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் இனி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையக் கூடாது!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவசியம் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்குச் செல்லவுள்ள அதிகாரிகள் மட்டக் குழு, இனிவரும்…

60 0 0