உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

மாமனாரை கொ*லை செய்த மருமகன் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
77 பார்வைகள்

கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02) வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆவார்.

நேற்று இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவரான (மருமகன்) சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறியுள்ளதோடு, இதன்போது ஆத்திரமடைந்த மருமகன், வீட்டிலிருந்த கூரிய ஆயுதத்தால் மாமனாரைத் தாக்கிப் கொலை செய்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடையேயான படகு சேவை நேர அட்டவணை வெளியீடு!!

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார் அதனடிப்படையில் படகு…

33 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் தொகை வழங்கும் நிகழ்வு.!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்ணோயியல் பிரிவுக்கான கிளி மக்கள் அமைப்பினால் லண்டனில் வாழும் தங்கராஜா…

54 0 0
இலங்கை செய்திகள்

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பில் தவிசாளர் கருத்து.!

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில்…

39 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அத்தியாவசியம்.!

கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் பற்றிய பிராந்திய மாநாடு 2026 (Overseas Voting – OCV)” சர்வதேச மாநாட்டின் விருந்தினர் வரவேற்பு…

51 0 0