உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அத்தியாவசியம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
83 பார்வைகள்

கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் பற்றிய பிராந்திய மாநாடு 2026 (Overseas Voting – OCV)” சர்வதேச மாநாட்டின் விருந்தினர் வரவேற்பு உபச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அமைச்சர் தனது உரையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களிப்பதற்கான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கும்போது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கைக்கு வெளியே பெருமளவிலான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும், நாட்டுடனான அவர்களின் பிணைப்பு புவியியல் எல்லைகளைத் தாண்டியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் இன்னமும் தங்களது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், அவர்களின் வாக்களிப்பு உரிமையை உறுதி செய்யும் எதிர்காலச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பிற நாடுகளின் அனுபவங்களிலிருந்து இலங்கை கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளதாகவும், சர்வதேச நடைமுறைகளை ஆராய்வதன் மூலம் உலகளாவிய சமூகத்தின் யதார்த்தங்களுக்கு ஏற்ப இலங்கையின் தேர்தல் சட்டக் கட்டமைப்பை மேம்படுத்த இந்த மாநாடு பெரிதும் உதவும் என்றும் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0