குருதிக் கொடை நிகழ்வு.!
ஹட்டன் தலைமையகக் காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த குருதிக் கொடை நிகழ்வு இன்று (3) ஹட்டன் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
160 ஆவது காவல்துறை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த குருதிக் கொடை நிகழ்வில், ஹட்டன் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, காவல்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த குருதி தானம் செய்தோர் குழுவினர் கலந்துகொண்டனர்.


