உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
53 பார்வைகள்

கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா மாநகர சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டு விழாவின் முக்கிய அம்சமாக, மாநகர சபை வரலாற்றில் முதன்முறையாக 12 நாட்கள் தொடர்ச்சியாக ஸுப்ஹான மௌலித் ஓதுதல் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டமை மற்றும் பல்வேறு கஸீதா குழுக்களின் நபி புகழ் பாடல்கள் இந்த நிகழ்வுக்குச் சிறப்பைச் சேர்த்தன.

கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கேலி பால்தசார் மற்றும் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் மீலாதுன் நபி விழா, தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாமனாரை கொ*லை செய்த மருமகன் கைது.!

கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலுகடுமெட்டியாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு அருகே நேற்று புதன்கிழமை (02)…

70 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அத்தியாவசியம்.!

கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் பற்றிய பிராந்திய மாநாடு 2026 (Overseas Voting – OCV)” சர்வதேச மாநாட்டின் விருந்தினர் வரவேற்பு…

45 0 0
இலங்கை செய்திகள்

குருதிக் கொடை நிகழ்வு.!

ஹட்டன் தலைமையகக் காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த குருதிக் கொடை நிகழ்வு இன்று (3) ஹட்டன் காவல் நிலையத்தில்…

49 0 0
இலங்கை செய்திகள்

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பு.!

வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி, வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.…

21 0 0