உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
66 பார்வைகள்

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமினி குமாரவின் மேற்பார்வையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மாத்தறை வெலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 02 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கூடுதலாக, போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபாய் பணம், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் நாளை (28) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தொலைபேசி வெடித்து இளைஞன் பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன்…

76 0 0