குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!
குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர். பி.கே பெருந்தோட்ட பொறுப்பில் உள்ள மஸ்கெலியா ஹப்புகஸ்தனை தோட்டத்தில் ஆண்கள் 7 பேர், பெண்கள் 4 பேர் அடங்கிய பதினொரு தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 வயதுடைய சிறுவர்கள் இருவரும், 12 வயதுடைய சிறுவன் ஒருவன் அடங்கலாக 11 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று பௌர்ணமி தினத்தில் தாங்கள் பணிபுரியும் தேயிலை செடிகள் அடங்கிய தேயிலை மலையில் உள்ள முனியாண்டி சுவாமியை கும்பிட போய் நெய்வேத்தியம் செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அதிக புகை காரணமாக மரத்தின் மேல் பகுதியில் இருந்த குளவிக் கூடு கலைந்து கொட்டியுள்ளது.