உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
39 பார்வைகள்

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து நேற்று (26) யாழ்ப்பாணம் அரியாலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததிருந்தனர்.

ஆரம்பத்தில் தனது கருத்தை இருபது நிமிடங்கள் வரை சிங்கள மொழியில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்தார். அதன் பின்னர் சிங்கள உரையின் மொழிபெயர்ப்பைத் தமிழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கினார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதில் வழங்கிய நிலையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் தமக்கு வேறு ஒரு பணி இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர்.

ஆட்சிக்கு வர முதல் அடிக்கடி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்புக்களை நடத்திய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் எப்போதாவது இருந்து விட்டே ஊடக சந்திப்புக்கு அழைப்பர். அவ்வாறான நாளிலும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்து விட்டு ஊடகவியலாளர்கள் தங்கள் கேள்விகளை முன்வைப்பதற்குப் போதிய சந்தர்ப்பத்தை வழங்காமல் வேறு பணிகள் இருக்கின்றன எனக் கூறிவிட்டு சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

47 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

47 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

41 0 0