உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
48 பார்வைகள்

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை பொலிஸ், சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவ்விடயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த அபாயகரமான நிலைமை குறித்துப் பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போது இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

47 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.!

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை…

39 0 0
இலங்கை செய்திகள்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை…

41 0 0