உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
39 பார்வைகள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு புதிய ஆயருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பை முன்னிட்டு நடைபெற்ற மத நிகழ்வில் மறைமாவட்டத்தின் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திருச்சபை நிர்வாகிகள், விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமளவானோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்கு சுமந்திரன் கடும் கண்டனம்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நிதி அல்ல எமக்கு நீதியே முதன்மையானது.!

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான். ஆனால், அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது! நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு.…

38 0 0
இலங்கை செய்திகள்

தீவகத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.!

தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்…

54 0 0
இலங்கை செய்திகள்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. கிழக்கில் தமிழர்களின்…

51 0 0