உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சுரேஷ் சலேவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
45 பார்வைகள்

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டினார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் இம்மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அதனை மேலும் நீடிப்பது பொருத்தமற்றது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 7 உள்நாட்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலோ அல்லது அடிப்படை உரிமை மனுக்களிலோ சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

எஃப்.பி.ஐ (ய்யணூ) மற்றும் ஆஸ்திரேலிய பொலிஸ் உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இது ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தாக்குதல் என்றே முடிவு செய்துள்ளன.

‘சனல் 4’ ஊடகத்திற்கு எல்.ரி.ரி .ஈ. அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அஷாத் மௌலானா வழங்கிய பொய் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இமாம் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் பயங்கரவாத வலையமைப்பை அழிக்கப் பாடுபட்ட ஒரு படைவீரருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி எமக்குக் கவலையளிக்கின்றது.

தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே அரச புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை.

இந்த விவகாரத்தில் முறையான மற்றும் நியாயமான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

33 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பொலிஸாருக்கு கிடைத்த…

70 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதக் கடவையில் இடம்பெற்ற கோர விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

72 0 0
இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் காணப்படும் பாலம்; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

தலவாக்கலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயிலில் உள்ள பிரதான பாலம் சுமார் 150 வருடங்கள்…

52 0 0