உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

புதிய அரசமைப்பின் ஊடாகவே நீதியரசர்களின் பதவிக்காலத்தைத் திருத்தம் செய்ய முடியும்

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
117 பார்வைகள்

“புதிய அரசமைப்பொன்றின் ஊடாகவே நீதியரசர்களின் பதவிக்காலத்தைத் திருத்தம் செய்ய முடியும். அவ்வாறன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மாத்திரம் பதவிக்காலத்தை நீட்டிப்பது முறையற்ற செயலாகும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதித்துறையை அரசியல் மயமாக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. நீதிமன்றக் கட்டமைப்பில் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் நிலவுவதால், உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கூறுவது முற்றிலும் தவறானது. நீதியரசர்களின் நியமனங்களைத் தாமதப்படுத்துவதால், தகுதியுள்ள பல நீதிபதிகளின் பதவி உயர்வுகள் தடுக்கப்படுகின்றன.

உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் பெறும் தகுதியுள்ளவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே ஓய்வுபெறும் துரதிர்ஷ்டவசமான நிலை கடந்த காலங்களிலும் காணப்பட்டது. தற்போதைய அரசு அரசமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்க முயற்சிக்கின்றது. அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை அரசு திருத்தம் செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட சிலரை மட்டும் தெரிவு செய்து, அவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது சட்டத்துக்குப் புறம்பான மற்றும் முறையற்ற செயலாகவே அமையும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0