உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசுக்குத் தைரியமில்லை – எதிர்க்கட்சி விமர்சனம்!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
132 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு இதுவரை எந்தவிதமான வினைத்திறனான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம் என்று அரசு மேடைப் பேச்சுகளில் மாத்திரமே கூறி வருகின்றது, செயலில் ஒன்றும் நடக்கவில்லை.

செயற்குழுவில் முன்வைக்கப்படும் யோசனைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தேர்தலை விரைவாக நடத்தும் எவ்வித நோக்கமும் அரசுக்கு இல்லை.

மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாகக் கூறும் அரசு, தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மட்டுமே மக்கள் தமது உண்மையான அபிப்ராயத்தை வெளிப்படுத்துவார்கள்.

அரசின் மீதான மக்களின் நம்பிக்கை தற்போது பெருமளவு சிதைவடைந்துள்ளதால், அரசு தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0