உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பலாலி இராணுவ வைத்தியசாலையை இடிப்பதற்கான நடவடிக்கையை வலி. வடக்கு பிரதேச சபை முன்னெடுக்கும் – சுமந்திரன் உறுதி!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
102 பார்வைகள்

உள்ளூராட்சி சபையின் கட்டட அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட பலாலி இராணுவ வைத்தியசாலையை இடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

பலாலி இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தமை குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 176 காணிகள் தொடர்பான வழக்கிலும், அந்த வைத்தியசாலை அமைந்துள்ள காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அது ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணி என்ற நிலைப்பாட்டையே அதிகாரிகள் முன்வைக்கின்றனர். அந்தக் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே எமது தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சுவீகரிக்கப்பட்ட காணிக்குள் வைத்தியசாலையை அமைப்பதாக அவர்கள் பதிலளிக்கின்றனர்.

எந்தவொரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாயினும், அந்தப் பிராந்தியத்துக்குரிய உள்ளூராட்சி மன்றத்தின் கட்டட அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும். ஆனால், இது அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானமாகும். இதனை உடனடியாக நிறுத்துமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அவர்கள் அந்த அறிவுறுத்தலைப் பின்பற்றத் தவறினால், குறித்த கட்டடத்தை இடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை வலிகாமம் வடக்கு பிரதேச சபை மேற்கொள்ளும்.” – என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0