உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுடன் பலர் கைது.!

72 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் அதன் வடிவம் மாற்றியமைக்கப்பட்டிருந்த 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக சத்தத்துடன், அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் குறித்து ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் ஹோமாகமவைச் சுற்றியுள்ள பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, சைலன்சர்களின் சத்தம் மாற்றப்பட்ட, பக்கவாட்டுக் கண்ணாடிகள் (Side Mirrors) இல்லாத, சேற்றுக்காப்பான்கள் (Mudguards) இல்லாத, இலக்கத் தகடுகள் இல்லாத மற்றும் முகப்பு விளக்குகளின் வடிவங்கள் மாற்றப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மோட்டார் சைக்கிள்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் (RMV) சமர்ப்பிப்பதற்காகப் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நூதனமுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு – சந்தேக நபர் கைது!

மட்டக்களப்பில் நூதனமாக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற…

55 0 0
இலங்கை செய்திகள்

மர்மம் விலகாத விசாரணைகளுக்கு மத்தியில் நாளை விடைபெறுகின்றார் சி.டி.விக்கிரமரத்ன!

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை திங்கட்கிழமை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்தப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப்…

45 0 0
இலங்கை செய்திகள்

சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின்…

21 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்…

31 0 0