உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

38 பார்வைகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பல தீர்க்கமான சாட்சியங்களை முன்னாள் பொலிஸ்மா அதிபர் வழங்கியிருந்தார்.

குறிப்பாக, ‘சாரா ஜாஸ்மின்’ என்பவரின் டி.என்.ஏ. பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமக்குக் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.

இத்தகைய பாரதூரமான விடயங்களை வெளிப்படுத்திய சில நாள்களிலேயே அவர் உயிரிழந்திருக்கின்றமை பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருகின்றது.

கடந்த காலங்களிலும் சாட்சியங்களை வழங்கிய நபர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் இவருடைய மரணத்தையும் ஒரு பாரதூரமான பிரச்சினையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டின் நிழல் அரசின் ஆதிக்கம் இன்னும் தொடர்கின்றது என்பதையும், சாட்சிகளைத் திட்டமிட்டு அகற்றும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகத்தையும் இது வலுப்படுத்துகின்றது.

எனவே, இந்த மரணம் குறித்து மிக விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மறுபுறம், ஒரு குறிப்பிட்ட குடும்பத்துடன் தொடர்புடைய ஊழல் நிறைந்த இரு ஊடக நிறுவனங்கள், இந்த மரணத்தை அவசரமாகத் தற்கொலை எனச் சித்தரிக்க முயற்சித்தன.

அவ்வாறான ஊடகங்களின் இத்தகைய செயற்பாடே, எமது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.” – என்றார்

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

77 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

82 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

71 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

95 0 0