உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிய பயிற்சி மருத்துவர்கள் நியமனம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
63 பார்வைகள்

நாட்டின் பொதுச் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பயிற்சி மருத்துவர்கள் இன்று சனிக்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடமைகளைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் போது புதிய மருத்துவர்களுக்கான நியமனக் கடிதங்களை வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் வழங்கி வைத்தார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்குமுகப் பயிற்சி தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவப் பிரிவுகளில் உத்தியோகபூர்வமாகப் பயிற்சிக் கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

பொதுமக்களுக்குத் தரமான மற்றும் மனிதநேயமிக்க சுகாதாரச் சேவையை வழங்கும் நோக்கில், அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவக் குழுவில் இணைந்துள்ள புதிய மருத்துவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல். பாறூக், முகாமைத்துவ தர வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். ரயிஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்..எஸ். இர்ஷாத், தாதிய பரிபாலகிகளான திருமதி ஜி. ஜெகதீஸ்வரி, திருமதி ஏ.ஜி.எப். ஹினாயா மற்றும் தலைமை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் என்.எல்.எம். தொளபீக் உட்பட வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நூதனமுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு – சந்தேக நபர் கைது!

மட்டக்களப்பில் நூதனமாக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற…

54 0 0
இலங்கை செய்திகள்

மர்மம் விலகாத விசாரணைகளுக்கு மத்தியில் நாளை விடைபெறுகின்றார் சி.டி.விக்கிரமரத்ன!

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை திங்கட்கிழமை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்தப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப்…

45 0 0
இலங்கை செய்திகள்

சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின்…

21 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்…

31 0 0