உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
20 திங்கள்

விபத்தில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
76 பார்வைகள்

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டைப்பெரியகுளம் – வவுனியா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது.

வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பருடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நூதனமுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு – சந்தேக நபர் கைது!

மட்டக்களப்பில் நூதனமாக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற…

55 0 0
இலங்கை செய்திகள்

மர்மம் விலகாத விசாரணைகளுக்கு மத்தியில் நாளை விடைபெறுகின்றார் சி.டி.விக்கிரமரத்ன!

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள், நாளை திங்கட்கிழமை முழுமையான பொலிஸ் மரியாதைகளுடன் நடத்தப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப்…

46 0 0
இலங்கை செய்திகள்

சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின்…

21 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடலுக்கு ரணில் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானதையடுத்து, அவரின் பூதவுடலுக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்…

31 0 0