உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடு வழங்கல்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
75 பார்வைகள்

உயர்தர மாணவர்களுக்கான இலவச சுய கற்றல் கையேடு வெளியீடானது வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் இடம்பெற்றது.

உயர் கல்வி விரிவாக்க மீள் எழுகை ஆற்றுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் உயர்தர மாணவர்களுக்கான சுய கற்றல் கையேடுகள் வெளியிடும் நிகழ்வு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான சண்முகேந்திரன் சுகுணராணி தலைமையில் வெண்கரம் இளையோர் அணியின் நெறிப்படுத்தலுடன் சித்தங்கேணி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர்களான திரு சி.திவாகரன் (ஓய்வு நிலை அதிபர் வட்டு மத்திய கல்லூரி, திரு மு. செல்வஸ்தான் (ஓய்வுநிலை அதிபர் ஸ்கந்தவரோதயா கல்லூரி) இருவரும் இணைந்து சுயகற்றல் கையேடுகளை வெளியிட்டு வைத்தனர்.

தொடர்ந்து வாழ்த்துரைகளை மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் பா.பாலசுப்பிரமணியம், சங்கானை ஸ்தான அ.த.க.த பாடசாலை அதிபர் திரு ம. முகுந்தன், சித்தன்கேணி ஸ்ரீ கணேஷ வித்தியாலய அதிபர் திருமதி அ.கலைவாணி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

வெண்கரம் பிரதான செயற்பாட்டாளரும் ஓய்வுநிலை ஆசிரியருமான ஜீ.சாந்தினிதேவி அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

வருகை தந்த மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டு மாணவர்கள், சுய கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல் செயற்பாட்டுடன் வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகனது நிறைவுரையுடன் நிறைவுபெற்றது.

இச்செயற்பாட்டிற்கான அனுசரணையை அமெரிக்கா முத்தமிழ் முன்னேற்ற மன்றம், ஈகை குழுமம், வட அமெரிக்கா இலங்கை தமிழ் பெண்கள் வலையமைப்பு ஆகிய அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0