உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

கட்டாரின் முன்னாள் மன்னரின் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுஷ்டிப்பு!

87 பார்வைகள்

கட்டாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி( Emir Sheikh Hamad bin Khalifa Al-Thani) , தனது 74-வது வயதில் காலமானார்.

இவரது மறைவுக்கு மதிப்பளிக்கும் வகையில், இன்று இந்தியா முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கமைய, அரசு அலுவலகங்கள் மற்றும் தேசியக் கொடி பறக்கும் அனைத்து இடங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், இன்று எந்தவித அரச கேளிக்கைகளும் இடம்பெறாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியை, கட்டாரை பெரும் வளர்ச்சி மற்றும் செழுமைப் பாதையில் வழிநடத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 2024 பெப்ரவரி மாதம் கட்டார் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அவர் ஒரு சிறந்த நண்பர் என்றும் பிரதமர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசம்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) சார்பில், ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 4.41 இலட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான கேள்விப்பத்திரம்…

72 0 0
இந்திய செய்திகள்

மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திங்கட்கிழமை (13) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட…

80 0 0
இந்திய செய்திகள்

இன்று மாலை அரச மரியாதையுடன் விடைபெறுகிறார் இசைக்குயில்!

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் இன்று (12) காலை அவரது இல்லத்திலிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு எடுத்துச் செல்லபட்டுள்ளது.…

48 0 0
இந்திய செய்திகள்

டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில்…

23 1 0