உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

டெங்கு நோயினால் 45 பேர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என்று அந்தப் பிரிவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாடு முழுவதும் உள்ள 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு பரவல் அதிகம் உள்ள அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மழையுடனான காலநிலை நிலவுவதால், கொசுக்கள் பெருகும் இடங்களைச் சுத்தப்படுத்துவது மிக அவசியமாகும்.

வீடு மற்றும் அலுவலகச் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவதன் மூலம் மாத்திரமே இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

தொடர் காய்ச்சல், தலைவலி அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவத்தைத் தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” – பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெங்குப் பரவல் அபாயத்தை உணர்ந்து, பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0