உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நேற்று திங்கட்கிழமை(29) மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டியா காட்டுப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வழமை போன்று ரோந்து சென்ற விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்ட காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததனால் துருப்பிடித்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் ஸ்னைப்பர் துப்பாக்கி – 01, ஒரு தொலைநோக்கி – 01, ரவைக்கூடு – 01, தோட்டாக்கள் – 07 உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளடங்குவதுடன் தற்போது தமன பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், ஆயுதங்கள் மீட்கப்பட்ட பகுதியில் கடந்த யுத்த காலங்களில் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களாக அறிவித்து செயற்பட்டு வந்ததுடன் கெரில்லா போர் உத்தியை இவ்வாறான ஆயுதங்கள் ஊடாக வெளிப்படுத்தி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0