உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மக்கள் எழுச்சி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
82 பார்வைகள்

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் – செம்மணிச் சந்தியில் அமைந்துள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கடத்தப்பட்டு மற்றும் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

கடந்த வருடம் இதே நாளில் (ஜூன் 28) செம்மணிச் சந்தியில் “அணையா விளக்கு” போராட்டம் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வானது, கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரதான ஆறு அம்சக் கோரிக்கைகளையும் மீண்டும் வலியுறுத்தி, நீதி கோரும் வகையில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0