உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் மீது விசாரணை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
60 பார்வைகள்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் இச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு (25) இடம்பெற்றுள்ளது.

119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ தினமான இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதான சந்தேக நபர் பொலிஸாரை அச்சுறுத்தி அவர்களை காயப்படுத்தியதுடன் துப்பாக்கியையும் கடமை நேரத்தில் பறிக்க முற்பட்டிருந்தார். இதன்போது அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு சந்தேக நபர் பறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் காயமடைந்த பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது தலைமறைவான சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவ்வேளை சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது 2000 ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாகவும் 2004 ஆண்டு அவ்வமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக அவ்வமைப்பில் இருந்து விலகி வந்ததாக குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தின் போது குடிபோதையில் இருந்த சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அதை லோட் செய்து துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பாடம் எடுத்ததுடன் உங்களுக்கு யார் பயிற்சி தந்தார்கள் என ஏளனத்துடன் பொலிஸாரை வினவியதாக விசாரணையில் கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் கைதான சந்தேக நபர் 44 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளவர் என்பதுடன் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0