உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
65 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய மேற்குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இக் காணியில் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த காணியில் பக்கோ இயந்திரம் மூலம் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு தடயப் பொருளும் கிடைக்கவில்லை என்பதுடன் அகழ்வு பணி நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்து வந்துள்ளதுடன் அக்காலகட்டத்தில் புலிகளின் மார்க்கமாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பணி சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், அம்பாறை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணி இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 12 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதை அடுத்து அனைவரும் வெளியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0