உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹோர்முஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு சுங்க கட்டணம் திட்டத்துக்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
84 பார்வைகள்

இந்தியா உள்பட தனது 5 நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லலாம் என்று ஈரான் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருகிறது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.


இந்த நீரிணையை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்து உள்ளது.


அதேவேளையில் இந்தியா உள்பட தனது 5 நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லலாம் என்று ஈரான் தெரிவித்தது.

இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து செல்ல கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்தது.
அதன்படி, ஹோர்முஸ் நீரிணையை ஒரு கப்பல் கடப்பதற்கு சுமார் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.18 கோடி) வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரான் பாராளுமன்றப் பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஹோர்முஸ் நீரிணைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கப்பல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,நிதி ஏற்பாடுகள் மற்றும் ரியால் அடிப்படையிலான சுங்கக் கட்டண முறையைச் செயல்படுத்துதல் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.


இதற்கிடையே அமெரிக்க கருவூலத்துறை தலைவர் ஸ்காட் பெசென்ட் கூறும் போது, ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மீண்டும் அமெரிக்கா கைப்பற்றப் போகிறது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

109 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

198 0 0
Uncategorized

மட்டக்களப்பில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் விரைவில்

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில்…

117 0 0
Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

97 0 0