உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மகோகனி மரக்கட்டைகள் பறிமுதல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கேகாலையிலிருந்து ஹட்டன், குடகமவில் உள்ள ஒரு மர ஆலைக்கு திருட்டுத் தனமாக கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மகோகனி மரக்கட்டைகள் பலவற்றை, ஹட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் வன பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் (22) ஆம் திகதி பிற்பகல் பறிமுதல் செய்தது.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக பருத்தி மற்றும் பஞ்சு ஆகியவற்றால் மூடப்பட்ட நிலையில் அந்த மகோகனி மரக்கட்டைகள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே பொலிஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் நிசங்க கொடமுல்ல ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில், குற்றப்பிரிவுக்கு பொறுப்பான நிசாந்த டி சில்வா உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவால் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட மரக்கட்டைகள், ஹட்டன் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

27 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

32 0 0