உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் பதுக்கல்: ஒருவர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி பெருமளவிலான எரிபொருளை சட்டவிரோதமாகச் சேமித்து வைத்திருந்த ஒருவர், அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹுங்கம பொலிஸார், அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமடல பகுதியில் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த சோதனையில், 11 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 200 லீற்றர் டீசல் மீட்டுள்ளனர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜங்சகம, மாமடல பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில், இவ்வாறான சட்டவிரோத சேமிப்புகள் குறித்து பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

27 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

32 0 0