உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 80 கோடி ரூபாய் இழப்பு; அர்ஜுனா, தம்மிகவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சுமார் 80 கோடி ரூபா நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சரான அர்ஜுன ரணதுங்க மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இருவரையும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு டெண்டர்களை எவ்வித விதிமுறைகளுமின்றி தன்னிச்சையான முறையில் கையாண்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தை விலையை விட அதிக விலைக்கு ஒப்பந்தங்களை அனுமதித்ததன் மூலம், அரசுக்குச் சுமார் 80 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்த சட்டமா அதிபர் திணைக்களம், போதிய சான்றுகளின் அடிப்படையில் இருவருக்கும் எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

எரிபொருள் விநியோகம் மற்றும் கொள்வனவு நடைமுறைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் முடிவில், இந்தப் பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான முன் விசாரணையை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அன்றைய தினம் வழக்கை மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

27 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

32 0 0