உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

திருகோணமலை எண்ணெய் குதங்களை மிக விரைவாக புனரமைக்க அரசு முடிவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசு தீர்மானித்துள்ளது.

இது குறித்து ‘த இந்து’ நாளிதழுக்கு விசேட கருத்துத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இரண்டாம் உலகப் போர் காலத்து எண்ணெய் சேமிப்பு வசதிகளை மீளமைப்பதன் மூலம், நாட்டின் எரிபொருள் விநியோகச் சவால்களுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவதற்காக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னர் இத்திட்டத்தில் இந்திய தலையீட்டைத் தேசிய மக்கள் சக்தி எதிர்த்து வந்த போதிலும், தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விநியோகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரத்தில் நடைமுறைச் சாத்தியமான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது எரிசக்தி அமைச்சினால் இத்திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், திட்டம் விரைவில் கேள்விப்பத்திர நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

1 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0