உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மன்னாரில் காற்றாலை மின்சாரக் கம்பிகளில் சிக்கி பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அரிய வகை வெளிநாட்டுப் பறவையான பிளமிங்கோ (Flamingo), அதிவலு கொண்ட காற்றாலை மின்சாரக் கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் இரண்டு பறவைகள் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு பறவை பலத்த காயமடைந்துள்ளது.

தற்போது மன்னார் தீவுப் பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வருகை தரும் பருவகாலமாகும். இந்நிலையில், அங்குள்ள காற்றாலை மின்சார விநியோகக் கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளன.விபத்துக்குள்ளான பறவைகளை மீட்டபோது, அவற்றில் இரண்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மற்றுமொரு பறவை, மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப் பறவைக்கு மருத்துவ சிகிச்சையளிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரிய வகை பிளமிங்கோ பறவைகளைக் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்புப் பணிகளை வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் என்பன முன்னெடுத்து வருகின்ற போதிலும், இவ்வாறான விபத்துக்கள் இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

2 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0