உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சாரக் கட்டண அதிகரிப்பு; மக்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்-பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.


உலக சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். எனினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும் கூறினார்.


இதற்கான இறுதி முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏப்ரல்முதலாம் திகதி அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில், நாட்டிற்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமானதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 25ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா பற்றாக்குறை உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல் வரவுள்ளதாக இருந்தாலும், அதில் நெப்தா இருக்காது எனவும், அதற்குப் பதிலாக டீசலை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார்.


இந்த நிலைமையால், இரவு நேரங்களில் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும்அவர் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தேவையற்ற விளக்குகளை அணைத்து மின்சார சேமிப்பில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

2 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0