உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இலங்கையர்களுக்காக அவுஸ்திரேலியா வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டிலும் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதை அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் ஆட்க் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இரு நாடுகளும் அவதானத்துடன் செயற்படுவது குறித்தும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

இலங்கையின் கல்வி, விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குத் தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் அவுஸ்திரேலியாவிற்கும் ஓரளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.இந்த சந்திப்பில் அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் ரூத் பெயார்ட்மற்றும் இரண்டாம் செயலாளர் மெதிவ் லோர்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

2 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0