உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தகுதியற்ற பாம் எண்ணெய் விற்பனை: சுங்க அதிகாரி கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மனித நுகர்விற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட பாம் எண்ணெயை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் சுங்க அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மனித பயன்பாட்டிற்கு உதவாததாகக் கருதப்பட்ட ஐந்து கொள்கலன் பாம் எண்ணெய்களை அழிக்குமாறு முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், அந்த உத்தரவை மீறி, அவற்றை வேறு இடத்திற்கு மாற்றி, ஒரு கொள்கலனில் இருந்த பாம் எண்ணெயை சுமார் 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலும், குறித்த பாம் எண்ணெய்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகக் காட்டும் போலியான ஆவணங்களையும் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இச்சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், மேலதிகவிசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

2 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0