உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கனேடிய உள்ளூராட்சி மன்றத் சம்மேளனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் பி.பிரதீப், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தனி ராமநாயக்க, மதிப்பீட்டு உத்தியோகத்தர் கோவிந்தராஜ் டில்ஷான், நிகழ்ச்சி திட்ட அமைப்பாளர் லசிந்து பண்டார ஆகிய நால்வருடன் மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக், அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் உட்பட தற்போதைய பிரதேச சபையின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.புஷ்பகுமார மஸ்கெலியா பொது வைத்திய அதிகாரி எம்.எச்.ஈர்ஷாட், முன்னாள் வைத்தியர் கணேசலிங்கம் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நகர வர்த்தகர்கள், கலந்து கொண்டனர்.

இந்த புனரமைப்பு பணிகளுக்காக கனேடிய உள்ளூராட்சி மன்றம் 1 கோடி 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி வழங்கி இப் பணிகள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் மூலம் நடைபவனியை மேற்கொள்ள நடை வீதி, நவீன முறையில் உடற்பயிற்சி நிலையம், ஆண், பெண் இருபாலரும் ஆடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்றவற்றை வடிவமைத்து இன்னும் மூன்று மாத காலத்தில் மீண்டும் மக்கள் பாவனைக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

36 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

46 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

48 0 0