உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான சுப நேரத்தை நாங்களே தீர்மானிப்போம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியில் இருந்து விலகுவதற்கான சுப நேரத்தை நாங்களே தீர்மானிப்போம்” என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்த அரசு ஜனநாயகத்துக்குப் புறம்பாகச் செயற்பட்டு வருகின்றது.

அரசின் பலவீனமான நிர்வாகத்தால்தான் நாட்டில் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகக் கட்டமைப்பில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைச் சாட்டி, தமது நிர்வாகத் தவறுகளை மறைக்க அரசு முயற்சிக்கின்றது.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான சுப நேரத்தை நாங்கள்தான் அவருக்கு வழங்குவோம். எனவே, இந்த அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் நிபந்தனைகளின்றி ஒன்றிணைய வேண்டும்.

மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசில் பல ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் நாட்டுக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

49 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0