உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு சம்பவம் சர்வதேச விதிமீறல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகே ஈரானிய கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவமானது, சர்வதேச கடல்சார் விதிமுறைகளை மீறும் சட்டவிரோதச் செயலாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதுடில்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ உலகளாவிய உரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“விசாகப்பட்டினம் அருகே இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே ஈரானிய கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலால் இந்தச் சம்பவம் நேரிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதில் 80 இற்கும் மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரானியக் கப்பலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கையைக் கேட்டுக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை நான் கண்டிக்கின்றேன். இலங்கை தனது தேசிய நலன்களின் அடிப்படையில் சுயமாக முடிவெடுக்கும் உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் இந்தியா முதன்மையான பங்கை வகிக்க வேண்டும். இதற்காக ‘கொழும்பு பாதுகாப்பு மகாநாடு’ போன்ற பிராந்தியக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், கடல்சார் விழிப்புணர்வு முன்முயற்சிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் கொந்தளிப்புகளில் வெளிச்சக்திகளின் தலையீடு இருந்தது. அந்த நெருக்கடியுடன் தொடர்புபடுத்தி எனது குடும்பத்தின் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை நான் அடியோடு மறுக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

54 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0