உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

செம்பியன்பற்று அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை அதிபர் சுப்பிரமணியம் கணேஷ்வரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.


நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவித்து, பாண்ட் இசை முழங்க அவர்களை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டதுடன் தேசியக் கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லங்களின் கொடிகளும் ஏற்றப்பட்டன. அதன் பின்னர் நிகழ்வின் பிரதம விருந்தினர் விளையாட்டுப் போட்டியை சம்பிரதாய முறையில் ஆரம்பித்து வைத்தார்.


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில்பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கல்வி வலயத்தின் முகாமைத்துவ பிரதிக் கல்வி பணிப்பாளர் நடராஜா காண்டீபன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருதங்கேணி கோட்டக் கல்வி பணிப்பாளர் செல்வராசா இராமச்சந்திரன் ஆகியோர் உட்பட கௌரவ விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர்.


இவ்விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி, இசை மற்றும் அசைவு நிகழ்ச்சிகள், சிறு ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள், பழைய மாணவர்களுக்கான விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.


நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், அயல் பாடசாலை ஆசிரியர்கள், மதகுருமார்கள், பழைய மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0