உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சுற்றுலா மேம்பாட்டை நோக்கி ஜப்பான் பிரதிநிதிக் குழு இலங்கை விஜயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனம் ஒன்றின் ஒருங்கிணைப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 11 பேர் கொண்ட ஜப்பான் பிரதிநிதிக் குழு இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்தது.இலங்கை மக்களின் வரலாறு, புத்தமதத்தின் வருகையும் வளர்ச்சியும், பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், மரபுப் பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து புரிந்து கொள்வதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.


இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதுடன், இங்கு பெற்ற அறிவையும் அனுபவங்களையும் தங்கள் நாட்டினருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


மேலும், ஜப்பானில் இலங்கையை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்துதல், கொழும்பு, அநுராதபுரம், சீகிரியா, மஹியங்கனைமற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு நாட்டின் கலாசார மரபுகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லுதல் தொடர்பிலும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சபுகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சீகிரியா, தம்பான, மல்வத்து மகா விகாரை மற்றும் துறைமுக நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் பிரதிநிதிக் குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0