உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மசகு எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பின்னர், உலகின் முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.


மாற்றுப் பாதைகள் இல்லாத சூழ்நிலையில், ஈராக், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகள் தங்களது எண்ணெய் உற்பத்தியை குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தவோ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன் தாக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 120 டொலர் வரை உயர்ந்த நிலையில், தற்போது சுமார் 103 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 73 டொலராக இருந்த நிலையில், மார்ச் 14 ஆம் திகதி அது 103 டொலராக உயர்ந்துள்ளது.

இதனால் கடந்த 15 நாள்களில் மசகு எண்ணெய் விலை 40 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.
ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து தடைகள் தொடர்ந்தால், வரும் நாட்களிலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

47 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0