உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது பற்றிஅரச நிறைவேற்று அதிகாரிகளுக்குச் செயலமர்வு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நேற்று வியாழக்கிழமை இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், ‘அரச சேவையை மாற்றியமைப்பதற்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.இந்நிகழ்வை ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலில், இரத்தினபுரி மாவட்ட செயலகம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்தது.


அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசு வேலைத்திட்டத்தின் ஓர் பகுதியாக, அதிகாரிகளை புதிய தொழில்நுட்பத்திற்குப் பயிற்றுவித்தும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான சாதக அணுகுமுறையை உருவாக்குவதும் இந்த திட்டத்தின் நோக்கம்.


இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவன முன்னாள் பணிப்பாளர்களும், ஜனாதிபதி அலுவலகத்தின் டிஜிட்டல் திறன்மேம்பாட்டு திட்ட வளவாளர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர்.


சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள சிவில் சேவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

38 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0