உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் தொலைபேசி தொடர்பில் மாற்றம் – மனோ கணேசன் கவலை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கொழும்பு – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பிறகு, அவரது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் ஏற்படும் மாற்றத்தைக் குறித்து கவலை தெரிவித்தார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதை வெளிப்படுத்தியுள்ளார். மனோ கணேசன் கூறியதாவது:
“நாங்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாரம் ஒருமுறை இரவு 10 மணிக்குப் பின்னர் எனக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசுவார்.

பல்வேறு விடயங்களைப் பற்றிய நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெறுவார்கள்.ஆனால், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், நான் அவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாலும் எந்த பதிலும் வருவதில்லை. அது பரவாயில்லை.”
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஏற்பட்ட இந்த தொடர்பாடல் மாற்றம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

38 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0