உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கலாசார திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் ‘அரச சுபநேரக் குழுவை’ கலைத்ததோடு, அரசாங்கம் இதுவரையில் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை.இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழுவின் உறுப்பினர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (10) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டது.

இதற்கிடையில், ஜோதிடர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று புத்தசாசன அமைச்சுக்கு சென்று அரச சுபநேரக் குழுவை உடனடியாக மீளச் செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், அரச சுபநேரக் குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்காவிடின், தமது கட்சியின் தலையீட்டின் மூலம் மக்களுக்கான புத்தாண்டு சுபநேர பத்திரத்தை முன்வைப்பதாக ‘சர்வஜன அதிகாரம்’ அறிவித்திருந்தது.

இதற்கமைவாக, ‘சர்வஜன அதிகாரம்’ அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், உறுதியளித்தபடி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு, பெபிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவென் ரஜமகா விகாரையின் பரிவேணாதிபதி பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று (14) அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ‘சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் குறித்த பிரிவெனாவுக்குச் சென்று பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரை சந்தித்தனர்.

இதற்கிடையில், பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் 17 ஜோதிடர்கள் இன்று சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவுக்கு வருகை தந்து கலந்துரையாடியதுடன், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதன்படி, அனைவரினதும் இணக்கப்பாட்டையடுத்து குறித்த புத்தாண்டு சுபநேர பத்திரம் வெளியிடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

21 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

37 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0