தனித்தனி கத்திக்குத்து சம்பவங்களில் பலியான இருவர்.!
கம்பஹா மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதல் சம்பவம் கட்டானை காவல் பிரிவுக்குட்பட்ட மஹாஹுனுபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அங்கு 42 வயதுடைய ஒருவர் மற்றொருவருடன் ஏற்பட்ட தகராறின்போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இரண்டாவது சம்பவம் கெரகல காவல் பிரிவுக்குட்பட்ட மஹாபெலஹல பகுதியில் நிகழ்ந்துள்ளது. தொம்பே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் வாக்குவாதத்திற்குப் பின்னர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் உடல் கம்பஹா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இரு சம்பவங்களுடனும் தொடர்புடையசந்தேக நபர்களைக் கைது செய்யும் நோக்கில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.