உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

எரிபொருள் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் – லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.ரகு இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் என்ற ரீதியில், எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். நாட்டிற்கு மிகவும் அவசியமான வலுசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

தற்போதைய நிலைமை மிகவும் சிறப்பாக இருப்பதாக நான் கூறவில்லை. எவ்வாறாயினும், நாட்டுக்குள் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவதற்காக லங்கா ஐஓசி நிறுவனமும் அரசாங்கமும் தங்களால் இயன்ற உச்சகட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிப்போம்” எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

23 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

37 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0