உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பெண்கள் உரிமை கோரி மட்டக்களப்பில் பேரணி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவை செயற்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு “நிலையான வாழ்வை நோக்கி ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பல பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.


சூரிய வள நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு நகரம் வழியாக பறை மேளங்கள் முழங்க முன்னேறியது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை தாங்கியவாறு, வினோத உடைகள் அணிந்த பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

“தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியம்”, “ஒப்புதல் இன்றி உடலுறவு குற்றமாகும்”, “அனைவருக்கும் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும்”, “வீட்டு வன்முறை வேண்டாம்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் பல வாசகங்கள் பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டன.


பேரணி கல்லடி பாலம் வழியாக சென்று கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீமுருகன் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. அங்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இதன்போது சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

38 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0