இலங்கையின் துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்தில் அமெரிக்க ஒத்துழைப்பு.!
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்கா விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு நேற்று, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பணியக அதிகாரிகள் இடையிலாக நடைபெற்றது.
அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையின் துறைமுகம் மற்றும் விமானப்போக்குவரத்து துறைகளில் உறுதிமிக்க உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் வர்த்தகமும் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்துறைகளில் ஏற்படுத்தப்படும் முன்னேற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்பான மற்றும் உறுதிமிக்க வலயமாக்குவதில் பெரும் பங்களிப்பாக அமையும்.இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இலங்கையின் நீண்டகால பொருளாதார இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் சர்வதேச வர்த்தக பங்களிப்பை அதிகரிப்பதற்கும் உதவும் என அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.