தென் கடலில் சிக்கிய போதைப்பொருள் படகு – கைதான10 பேருக்கும் தடுப்புக்காவல்.!
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம், தென் கடற்பரப்பில் சுமார் 10 பில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி கடற்படையினர் ஆழ்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளை முற்றுகையிட்டு, அவற்றில் இருந்த 10 சந்தேகநபர்களை போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 176 கிலோ ஹெரோயின் மற்றும் 478 கிலோ “ஐஸ்” (மொத்தம் 654 கிலோ), 8 பிஸ்டல்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் கைப்பற்றப்பட்டன.
22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட இவர்களில் மஹவெவ், நீர்கொழும்பு, தங்காலை மற்றும் கந்தர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இச்சம்பவ தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.