உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ரணிலின் வெளிநாட்டு பயண வழக்கு அரசுக்கே வினையாகும் – உதய கம்மன்பில எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு, எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கே பாதகமாக முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஒரு ஜனாதிபதியின் பயணங்களை உத்தியோகபூர்வம் மற்றும் தனிப்பட்டது எனத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஒருவர் இருபத்துநான்கு மணிநேரமும் பொறுப்பில் இருக்கும் நிலையால், அவர் மேற்கொள்ளும் பயணங்களைப் பற்றி இவ்வாறு விவாதிப்பது தேவையற்றது என்றும் அவர் கூறினார்.

மேலும், ஜனாதிபதி ஒருவர் தனிப்பட்ட பயணங்களில் உத்தியோகபூர்வ வாகனங்களையோ பாதுகாப்பையோ பயன்படுத்த முடியாது என வாதிடுவது ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அப்படியானால் ஜனாதிபதியின் தனிப்பட்ட பயணங்கள் பாதுகாப்பற்றதாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ரணில் விக்கிரமசிங்க லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றது தனிப்பட்ட நிகழ்வு என அரசு தரப்பு கூறினால், பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டதும் தனியார் நிகழ்வாகக் கருதப்படலாம் என்றும் அவர் கூறினார்.


அதேபோல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பான் மற்றும் அனுராதபுரம் சென்ற பயணங்களும் அரசியல் தொடர்புடையவையே என்றும், அவற்றிலும் உத்தியோகபூர்வ வாகனங்களும் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.ரணில் விக்கிரமசிங்கவை குறிவைத்து மேற்கொள்ளப்படும் இந்தச் சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் அரசுக்கே சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் உதய கம்மன்பில எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

3 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0